தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரம் அருகே விபத்தில் ஒருவர் சாவு விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநரை கைது செய்யகோரி ஆர்பாட்டம்.
திருப்பூர்,
தாராபுரத்தை அடுத்த குமாரபாளையம் அருகே கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியை சேர்ந்த தங்கவேல் (வயது 53) என்பவர் வசித்து வந்தார். துப்புரவு பணியாளரான இவர் தனது மனைவி செல்வி (40). உடன் நேற்று முன்தினம் மொபட்டில் மூலனூர் அருகே வந்து கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த வழி யாக சென்ற கார் அவர்களது மொபட் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே தங்கவேல் பரிதாபமாக பலியானார். செல்வியின் இரு கால் களும் கார் சக்கரங்கள் ஏறியதில் நொறுங்கியது.
இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் மூலனூர் போலீசார் விரைந்து வந்து தங்கவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த செல்விக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் தங்கவேலின் உயிரிழப்புக்கு காரணமான காரை ஓட்டி வந்த நபரை உடனே கைது செய்ய வேண்டும். அதுவரை தங்கவேலுவின் உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி தாராபுரம்-கரூர் சாலை அரசு மருத்துவமனை முன் தமிழ் புலிகள் கட்சியின் மேற்கு மாநில செயற்குழு உறுப்பினர் ஒண்டிவீரன் தலைமையில் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது பற்றிய தகவல் அறிந்ததும் தாராபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விபத்தை ஏற்படுத்திய டிரைவரை விரைவில் கண்டுபிடித்து விடு வோம் என உறுதி அளித்தனர். இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு அவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் தாராபுரம் அரசு மருத்துவமனை முன் பரபரப்பு நிலவியது.