இராமநாதபுரம் மாவட்டம்
ஆர்.காவனூர் பெருந்தலைவர் இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக தமிழக முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாள் விழாவை மன்றத்தின் தலைவர் குருநாதன் அவர்களின் ஆணைக்கினங்க,மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் சசிக்குமார் அவர்களின் ஆலோசனையின் படிமன்றத்தின் பெருளாளர் பழனி தலைமையில்கிராம மக்கள் முன்னிலையில் வெகு சிறப்பாக விழா கொண்டாடப்பட்டது
பெருந்தலைவரின் திரு உருவ படத்திற்கு மலர் அலங்காரம் செய்து மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர்
இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு 10,11,12,ஆம் வகுப்பு அரசு பொது தேர்தலில் முதல் மதிப்பெண் பெற்ற
10 ஆம் வகுப்பு மாணவி நிகிதாஸ்ரீ
11ஆம் வகுப்பு மாணவி நேசிகாஸ்ரீ
12ஆம் வகுப்பு மாணவி நித்திய லெட்சுமி
உட்பட மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது
அதனை தொடர்ந்து ராமநாதபுரம் நகரில் இயங்கும் ஆதரவற்ற முதியோர் காப்பகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது நிகழ்ச்சியின் போது கலந்து கொண்ட
மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும்
இனிப்பு வழங்கப்பட்டது நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை பெருந்தலைவர் இளைஞர் நற்பணி மன்றத்தினர்
செய்து இருந்தனர்