தருமபுரி ஜூலை-15,
களப் பணியாளர்களின் பணி சுமையை குறைக்க வலியுறுத்தி தமிழ்நாடு நிலஅளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 48 மணிநேர வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
களப்பணியாளர்களின் பணிச்சுமையை குறைக்க வேண்டும்.
தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அளவர் பதவியை மீண்டும் வழங்க வேண்டும்.
நில அளவைத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். துணை ஆய்வாளர், ஆய்வாளர்கள் ஊதிய முரண்பாட்டை கலைந்திட வேண்டும்.
ஒப்பந்த முறையில் நில அளவர் நியமனத்தை கைவிட வேண்டும்.
புற ஆதார ஒப்பந்த முறையில் புல உதவியாளர் நியமனத்தை கைவிடவேண்டும். உயர் அலுவலர்களின் அதிகாரங்களை பறிக்கும் நடவடிக்கையை கைவிடவேண்டும். நீதிமன்ற நடைமுறை பயிற்சியை வழங்க வேண்டும். புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள நகராட்சிகளுக்கு நகர சார் ஆய்வாளர் பணியிடங்களை வழங்க வேண்டும்.
ஒப்படைக்கப்பட்ட சார் ஆய்வாளர் பணியிடங்களை மீள வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 48 மணி நேர வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கு. வெங்கட்டேசன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் ரா. கல்பனா, மாவட்ட செயலாளர் சி. பிரபு, மாவட்ட பொருளாளர் மா. முருகன், மாவட்ட இணை செயலாளர் மா. முரளிதரன், மாவட்ட துணைத்தலைவர் கு.சின்னராசு, கோட்ட தலைவர்கள் தருமபுரி ரா. துரை அரூர் ரா. சக்திவேல், ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் எம். சுருளிநாதன், மாவட்ட செயலாளர் ஏ. தெய்வானை வருவாய் த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் சி. துரை வேல்,
கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் அகிலன் அமிர்தராஜ்,தமிழ்நாடு வருவாய் ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ரங்கன் , தமிழ்நாடு நில அளவை பதிவேடுகள் துரை புல உதவியாளர் சங்க மாவட்ட தலைவர் சுரேஷ் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.