புதுச்சேரி, பிப்ரவரி 28:
புதுச்சேரி உப்பளம் தொகுதிக்குட்பட்ட வாணரப்பேட்டை அமலோற்பவம் பள்ளி culvert முதல் உப்பார் கால்வாய் வரை R CC வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. ரூ.48,89,809/- மதிப்பிலான இந்தப் பணியை அனிபால் கென்னடி தலைமையில் தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி அரசின் பொதுப்பணித்துறை நீர்ப்பாசனப் பிரிவு மூலம் மேற்கொள்ளப்படும் இந்தப் பணி, 5 மாத காலத்திற்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்விழாவில் பொதுப்பணித்துறை செயலர் முத்தம்மாள் தலைமை பொறியாளர் வீரசெல்வம், கண்காணிப்பு பொறியாளர் சுந்தரமூர்த்தி, நீர்ப்பாசனப் பிரிவு செயற் பொறியாளர் ராஜ்குமார், உதவி பொறியாளர் மதிவாணன், இளநிலை பொறியாளர் பிரித்திவிராஜ் மற்றும் ஒப்பந்ததாரர் பாவாடை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும், தொகுதி செயலாளர் சக்திவேல், பொருளாளர் மாறன், மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி, கிளை செயலாளர்கள் செல்வம், ராகேஷ், இளைஞர் அணி மரி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
இந்தப் பணி நிறைவு பெற்றால், அப்பகுதியில் நீர்நிலையமைப்பு மேம்பட்டு மழைக்காலங்களில் நீர் தேக்கம் குறையும் என பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.