திண்டுக்கல் நகர் போக்குவரத்து காவல் நிலைய வளாகத்தில் கிரெடிட் அக்சஸ் கிராமீன் லிமிடெட் சார்பாக சமூக மேம்பாட்டு திட்டத்தின் கீழ் திண்டுக்கல் நகர் உட்கோட்டத்தில் உள்ள நகர் வடக்கு, மேற்கு, தெற்கு, அனைத்து மகளிர் காவல் நிலையம், நகர் வடக்கு போக்குவரத்து நகர் தெற்கு போக்குவரத்து ஆகிய 6 காவல் நிலையங்களுக்கு பீரோ,டேபிள், சேர் உள்ளிட்ட தளவாட சாமான்கள் மற்றும் 30 பேரி கார்டுகள்.நகர் துணை கண்காணிப்பாளர்.கார்த்திக் முன்னிலையில் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் வினோதா, அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் முத்துமணி, நகர் போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர் பழனிச்சாமி உள்ளிட்ட காவல்துறையினர் மற்றும் தனியார் தொண்டு நிறுவனத்தினர் கலந்து கொண்டனர்.