இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட மலேரியா அலுவலர் ரமேஷ், தலைமை ஆசிரியர் சந்தானவேல், தலைமையில் உறுதி மொழி ஏற்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சுகாதார உறுதி மொழியில் எனது வீட்டிலோ வீட்டின் சுற்றுப்புறத்திலோ டயர், தேங்காய் சிரட்டைகள், உடைந்த குடங்கள், உபயோகமற்ற பிளாஸ்டிக் கப்புகள் பேன்ற பொருட்களை போடமாட்டேன், வீட்டில் தண்ணீர் சேமித்து வைக்கும் குடங்கள், சிமெண்ட், தொட்டிகள், டிரம்கள், ஆகியவற்றை கொசு புகாதவண்ணம் மூடி வைப்பேன். வாரம் ஒரு முறை தேய்த்துக் கழுவி சுத்தம் செய்வேன் இதன் மூலம் ஏடிஸ் கொசுப்புழு வளராமல் தடுப்பேன், நான் கற்றுக்கொண்டவற்றை அண்டை அயலார்க்கும் கற்றுக் கொடுத்து டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசு உருவாகாமல் பார்த்துக்கொள்வேன்.
அரசு எடுக்கும் அனைத்து கொசு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கும் நான் முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என்று உறுதி மொழி ஏற்றனர்.
இதில் இளநிலை பூச்சி வல்லுனர் பாலசுப்பிரமணியன், நாட்டு நலப்பணி திட்ட ஆசிரியர் மங்களநாதன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பூமிநாதன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார ஆய்வாளர் நேதாஜி, ஜெயச்சந்திரன், கருணாகர சேதுபதி, சபரி மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.