திருச்சிராப்பள்ளி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார், கீர்த்தனா விஜயகுமார் குடும்பத்தினர் அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க இலவச நூலகமும், பசிப்பிணி போக்க அன்றாடம் அன்னதானமும், பாரம்பரியம் காக்க புழங்கு பொருட்கள் காட்சியகமும், உரிமை கோரப்படாத அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்யும் பணியிலும் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்கள்.
இல்லத்தின் முகப்பிலேயே வைத்துள்ள புழங்கு பொருட்கள் காட்சியகத்தில் எடை கற்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. புழங்கு பொருட்கள் காட்சியகத்தை
திருச்சிராப்பள்ளி செயின்ட் ஜோசப் கல்லூரி தமிழாய்வுத்துறைத் தலைவர் முனைவர் ஆ.ஜோசப் சகாயராஜ், உதவிப் பேராசிரியர் முனைவர் ஜா.சலேத், முதுகலை மாணவர் சே. பிரான்சிஸ் ஆன்டனி, இளங்கலைத் தமிழ் மாணவர் ச.ஆசிக் டோனி
உள்ளிட்டோர் பார்வையிட்டு எடை கற்கள் குறித்து கேட்டறிந்தனர்.
அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் எடை கற்கள் குறித்து பேசுகையில், பழங்காலத்தில் எடை அளவிட பயன்பட்ட கற்கள் “எடைக்கற்கள்” என்று அழைக்கப்படுகின்றன. இவை வெவ்வேறு வடிவங்களில், அளவுகளில் பண்டைய காலத்தில், வணிகம் மற்றும் அன்றாட வாழ்க்கையில் பொருட்கள் மற்றும் தானியங்களின் எடையை அளவிட எடைக்கற்கள் பயன்படுத்தப்பட்டன.
எடைக்கற்கள் உருளை, சதுரம், மற்றும் பிற வடிவங்களில் காணப்படுகின்றன.
எடைக்கற்கள் பண்டைய நாகரிகங்களின் அளவீட்டு முறைகள் மற்றும் வர்த்தக முறைகளை புரிந்து கொள்ள உதவுகின்றன என்றார்