புழலில் அரசு பள்ளி மாணவ மாணவிகளுடன் போக்குவரத்து போலீசார் நடத்திய விழிப்புணர்வு.

செங்குன்றம் செய்தியாளர்

புழல் , அம்பத்தூர் சாலையில் உள்ள பொப்புளி ராஜா அரசு மேநிலைபள்ளியில் மாதவரம் போக்குவரத்து போலீசார் மாணவ மாணவிகளுக்கு போக்குவரத்து விதிகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

போக்குவரத்து துணை ஆணையாளர் ஜெயகரன் உத்தரவில் ,போக்குவரத்து உதவி ஆணையாளர் ரவி மேற்பார்வையில் ,மாதவரம் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்கள் பாலாஜி , பாலமுரளி , அய்யனார் உட்பட போக்குவரத்து போலீசார் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இருசக்கர வாகனங்களை இயக்கக் கூடாது எனவும் , பெற்றோர்கள் வாகனங்களில் செல்லும்போது தலைக்கவசம் அணிவதும் அவசியம் குறித்தும், இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணிக்க கூடாது எனவும் பின்னால் அமர்ந்து செல்லும் மாணவ மாணவிகளும் ஹெல்மெட் கண்டிப்பாக அணிய வேண்டிய அவசியம் குறித்தும் எடுத்துரைத்து அதனை மீறிவரும் வாகனங்கள் மீது அபராதம் விதித்து வழக்கு பதிவு செய்யப்படும் என அறிவுரை வழங்கினார்கள். இந்நிகழ்வில் பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *