திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டம், K.C. பட்டி ஊராட்சி கோரன் கொம்பு, குறவனாச் சி ஓடை, கோட்டைவழி, தங்கமார் பொறும்பு ஆகிய பழங்குடியினர் கிராமங்களில் பழங்குடியினர் நலத்துறை மூலமாக வீடற்ற பழங்குடியின மக்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், தாட்கோ வழியாக கட்டப்பட்டு வரும் வீடுகளை தமிழக அரசின் தாட்கோ முதன்மைப் பொறியாளர் அம்மா, மதுரை கோட்டம் தாட்கோ பொறியாளர்.மீனாட்சி சுந்தரம் அவர்களும், திட்டப்பொறியாளர்.
சுந்தரப்பன் ஆய்வு மேற்கொண்டனர். இன்னும் ஓரிரு மாதங்களில் பணிகள் முழுமையாக முடிக்கப்படும் எனவும், மேலும் வீடு கட்டும் பணிகளில் உள்ள பிரச்சினைகள் பற்றியும் கேட்டறிந்தும், அடுக்கம் ஊராட்சி தாமரைக்குளம், பாலமலை, பன்றிமலை – தங்கமார் பொறும்பு, வடகாடு -. கோட்டைவழி – பூண்டி – போலூர் ஆகிய பழங்குடியின கிராமங்களில் நடைபெற்று வரும் பணிகள் பற்றி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
உடன் கோரன் கொம்பு வன உரிமை கிராம சபை தலைவர்.கந்தன்,வன உரிமைக்குழு தலைவர். சங்கர்,கோடை குறிஞ்சி பெண்கள் இயக்கம் செயலாளர். மாலா ஆகியோர் உடனிருந்தனர்.