பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
தமிழக வெற்றி கழகம் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள்,
மரக்கன்றுகள் பாபநாசம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் வழங்கினார்….

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் கீழமாஞ்சேரி அரசு ஆதிதிராவிடர் நடுநிலைப் பள்ளியில் தஞ்சை வடக்கு மாவட்ட மகளிர் அணி
தமிழக வெற்றி கழகம் சார்பில் கல்வி உபகரணங்கள் மரக்கன்றுகள் வழங்கும் விழா மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜெயமணிகிஷோர் தலைமையில் நடைபெற்றது.
பாபநாசம் மத்திய ஒன்றிய செயலாளர் ராஜா, மகளிர் அணி மாவட்ட துணைச் செயலாளர் பிரியா, மாவட்ட பொருளாளர் கலைச்செல்வி ஆகியோர் முன்னில வகித்தனர்.
விழாவில் பாபநாசம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் அசாரூதீன் உதுமான் அலி கலந்துகொண்டு 100-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு நோட்டு பேனா பென்சில் சாம்ன்டரி பாக்ஸ், எழுத்து பேடு மற்றும் கொய்யா ,மா,தென்னை ஆகிய மரக்கன்றுகளையும் வழங்கினார் .
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஒன்றிய, நகர, வார்டு ,கிளை நிர்வாகிகளும் மற்றும் அனைத்து சார்பு பணி நிர்வாகிகளும் கிராம மக்களும் கலந்து கொண்டனர்.