அரியலூர் மாவட்டத்தின் புதிய போலீஸ் சூப்பிரண்டாக விஸ்வேஷ் பாலசுப்ரமணியம் சாஸ்திரி பொறுப்பேற்றார் தமிழகம் முழுவதும் 33 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து சமீபத்தில் அரசு உத்தரவிட்டது
அதன்படி அரியலூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளராக பதவி வகித்து வந்த தீபக் சிவாச் பணியிட மாற்றம் செய்யப்பட்டார் அவருக்கு பதிலாக சென்னை பெருநகர போக்குவரத்து வடக்கு மண்டல துணை கமிஷனர் ஆக பணியாற்றி வந்த ஐபிஎஸ் அதிகாரி விஸ்வேஷ் பாலசுப்பிரமணியம் சாஸ்திரி அரியலூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார்
இதனைத் தொடர்ந்து அவர் அரியலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டார் அவருக்கு காவல்துறை அதிகாரிகள் அமைச்சுப் பணியாளர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்
கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் பிறந்த விஷ்வேஷ் பாலசுப்ரமணியம் சாஸ்திரி கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு கேடர் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வானார் முதலில் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் துணை போலீஸ் சூப்பிரண்டாக பதவி வகித்தார் பின்னர் 2021 ஆம் ஆண்டு சென்னை கவர்னர் மாளிகை முகாம் கூடுதல் போலீஸ் சூப்பரண்டாகவும் 2022ஆம் ஆண்டு அங்கேயே போலீஸ் சூப்பிரண்டு பதவியும் வழங்கப்பட்டு பணியாற்றி வந்தார்
அங்கிருந்து காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட நிலையில் சென்னை பெருநகர போக்குவரத்து வடக்கு மண்டல துணை கமிஷனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார் இதை தொடர்ந்து தற்போது அரியலூர் மாவட்டத்தின் 15 வது போலீஸ் சூப்பிரண்டாக அவர் பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது