தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

தாராபுரம் லாட்டரி சீட்டு விற்ற இருவர் கைது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ஒரு நம்பர் லாட்டரி விற்பனை நடைபெற்று வருகிறது. பணம் இருப்பவர்கள் முதல் வேலைக்குச் செல்லும் கூலித் தொழிலாளர்கள் அதனை வாங்கு கின்றனர்.தினமும் உடல் உழைப்பை முதலீடாக்கி 100,200 என சம்பாதிக்கும் பணத்தை இழக்கும் கூலித் தொழிலாளர்கள் வறுமை கோட்டிற்கு கீழ் தள்ளப்படும் நிலை உருவாகி உள்ளது. சதாராபுரம் பூக்கடைகார்னர்,

வீதி, தினசரி மார்க்கெட் பொள்ளாச்சி ரோடு, சின்னக்கடை வீதியில் ஒரு நம்பர் லாட்டரி அமோகமாக விற்பனை செய்யப்படுகிறது இல்லை ஏஜெண்டுகள் மூலம் குறி வைத்து இந்த லாட்டரி விற்பனை செய்யப் படுகிறது. மூட்டை தூக்கும், தொழிலாளர்கள் முதல் வண்டியில் வைத்து காய்கறி விற்பனை செய்யும் தொழிலாளர் பணத்தை இழக்கின்றனர்.

பெரும்பாலும் விற்பனை கொள் முதல் செல்போன் மூலமாகவே நடைபெறுவதால் விற்பனையாளர்களை கண்டறிய முடிவதில்லை. ஒரு வேளை பரிசு விழுந்தால் ஏஜெண்டு மூலமாகவே பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது.இப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் பணத்தை இழப்பது தொடர் கதையாக உள்ளது. எனவே காவல்துறை தனிப்படை அமைத்து மக்களோடு மக்களாக பயணித்து தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் களங்கம் ஏற்படுத்தும் ஒரு நம்பர். லாட்டரி விற்பனையை தடுக்க வேண்டும் என
சமூக ஆர்வலர்கள் காவல்துறைக்கு கோரிக்கை விடுத்தனர்.

இது குறித்த செய்தி உள்ளாட்சி அரசு நாளிதழில் பிரசுரமானது. அதன் எதிரொலியாக தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் நேற்று தாராபுரம் ஐந்து சாலை சந்திப்பு, அலங்கியம் ரோடு,ராம்நகர், கடைவீதி பகுதிளில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு லாட்டரி விற்ற கொண்டரசம்பாளையம் பகுதியை சேர்ந்த கணேசன் (வயது 47), கோவிந்தாபுரம் பகுதியை சேர்ந்த அர்ஜுனன் (45) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு தாராபுரம் சமூக அலுவலர் சிவசங்கர் பாராட்டு தெரிவித்தார். மேலும் இதுபோன்ற தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு ஒரு நம்பர் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வரும் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என அவர் காவல்துறைக்கு கோரிக்கை விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *