பந்தநல்லூர் அருகே காகிதப்பட்டறை கிராமத்தில் விநாயகர் ஆலய மண்டல பூஜை நிறைவு விழாவில் திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரி சுவாமிகள் கலந்துகொண்டு பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கினார்.
பந்தநல்லூர் அருகே காகிதப்பட்டறை கமல விநாயகர், மகா சக்தி காளியம்மன்,
முனீஸ்வரர் ஆலயமகா கும்பாபிஷேக விழா கடந்த மாதம் நடைபெற்றது.
இதனையடுத்து கும்பாபிஷேகம் முடிந்ததும், 48 நாள் மண்டல பூஜை நடத்துவது வழக்கம். அவ்வகையில் தொடர்ந்து மண்டல பூஜை நடைபெற்று வந்தது. விழாவின் நிறைவாக 48-ம் நாள் மண்டல பூஜை நடைபெற்றது. மண்டல அபிஷேகத்தை முன்னிட்டு கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்று அன்னதானம் நடைபெற்றது.
பந்தநல்லூர்,காகிதப்பட்டறை,அத்திப்பாக்கம், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவில் திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாணதேசிக பரமாச்சாரி சுவாமிகள் கலந்துகொண்டு பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கினர்.
நிகழ்ச்சியில்கோவில்அறங்காவலர்கள், கிராம மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மண்டல அபிஷேகத்தை முன்னிட்டு கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்று அன்னதானம் நடைபெற்றது.