திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள அலங்கியம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சென்னாக்கல் பாளையம் அருகில் வசித்து வந்த முருகன் என்பவர் கடந்த ஜூன் 26 ம்தேதி இரு கைகள் கட்டிய நிலையில் தூக்கில் தொங்கிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியது. இந்த நிலையில் தமிழ்நாடு அருந்ததியர் அரசியல் அதிகாரக கூட்டியக்கம் சார்பில் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு பரிந்துரை செய்து உண்மை தன்மையை வெளிக் கொண்டு வர வேண்டும். குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து நேற்றுதிருப்பூர் மாவட்டம் தாராபுரம் சென்னாக்கல் பாளையத்தில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த தேசிய எஸ்.சி.எஸ்.டி ஆணையத்தின் இயக்குனர் ரவிவர்மன் முருகனின் வீட்டில் நேரில் விசாரணை செய்தார்.
பின்பு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட எஸ்பி ஆகியோரிடம் விசாரணை செய்தார்.மேலும் விசாரணை அதிகாரி தாராபுரம் டி .எஸ் பி யை மாற்றம் செய்ய உத்தரவிட்டார்.இதில் தமிழ் புலிகள் கட்சி முகிலரசன், ஒண்டிவீரன், வடிவேல், ராமன் மற்றும் சமூக நீதி மக்கள் கட்சி திராவிட தமிழர் கட்சி ஆதி தமிழர் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த நிர்வாகிகள், தாராபுரம் ஆர்டிஓ தாசில்தார் போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட பலர் கலந்து கொண்டனர்