திருவொற்றியூர் பருவ மழைக்கு அனைத்து துறை அலுவலர்களும் சேர்த்து பணியாற்ற வேண்டும் மண்டல குழு தலைவர் கூட்டத்தில் வேண்டு கோள் இந்த கூட்டத்தில் பொறுப்பு உதவி கமிஷனர் தேவே ந்திரன் உள்ளிட்ட துரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பங்கேற்றார். இக்கூட்டத்தில், 79 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிறைவேறிய தீர்மானங்கள் குறித்தும், வார்டின் அடிப்படை தேவைகள் குறித்து, கவுன்சிலர்கள் பேசினர்.
மழைக்கு அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து, பணி மேற்கொள்ள வேண்டும். என்று மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம் கேட்டு கொண்டார். தொடர்ந்து முகாம்கள் மற்றும் சமையல் கூடங்களுக்கு, குடிநீர் தொட்டிகள் வைக்க குடிநீர் வாரியம் ஏற்பாடு செய்ய வேண்டும். உதவி பொறியாளர்கள், உதவி செயற் பொறியாளர்கள், இயந்திரம், வாகன பயன்பாடுகள் குறித்து, தெளிவாக பட்டியலிட்டு வைத்துக் கொள்ள வேண்டும். காலி மனைகளில் மழைநீர் தேங்கும் விவகாரம் குறித்து, உரிமையாளர்கள் பட்டியல் தயார் செய்து, நோட்டீஸ் வழங்க வேண்டும். என்று மண்டல உதவி கமிஷனர் தேவேந்திரன் கூறினார்.