திண்டிவனம் நகரில் தமிழக பாஜக மாநிலத் தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டம்:-
விழுப்புரம் வடக்கு மாவட்டம், திண்டிவனம் நகரில் தமிழக பாஜகவின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தும் , தமிழகம் தலைநகர தமிழனின் பயணம் வெற்றி அடையவும் மற்றும் பொதுமக்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தும் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி பாஜக நிர்வாகிகள் கொண்டாடினர்,
பிரச்சார பிரிவு மாவட்ட அமைப்பாளர் சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரிவு மாநிலச் செயலாளர் தினேஷ் குமார் , வழக்கறிஞர் பிரிவு மாநிலச் செயலாளர் ஆர் ஆர் கே செந்தில், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராதிகா, இளைஞரணி மாவட்ட தலைவர் டி என் கே பிரபு, வழக்கறிஞர் பிரிவு மாவட்ட அமைப்பாளர் ராஜா, விருந்தோம்பல் பிரிவு மாவட்ட அமைப்பாளர் TT ராஜா,
ஐடி மாவட்ட அமைப்பாளர் செந்தில் விநாயகம், வர்த்தக பிரிவு மாவட்ட அமைப்பாளர் ராஜசேகர்,அமைப்புசாரா பிரிவு மாவட்ட அமைப்பாளர் செந்தில்குமார், பட்டியலணி முன்னாள் மாவட்ட தலைவர் நாகபாஷம், முன்னாள் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார், முன்னாள் பட்டியல் அணி பொதுச் செயலாளர் ஜெயபிரகாஷ், மற்றும் திண்டிவன நகர துணை தலைவர் தரணி, பிரச்சார பிரிவு மண்டல் தலைவர் முரளி சுதாகர் ஏகா. விஜய், மற்றும் நகர நிர்வாகிகள் கலந்துகொண்டு பொதுமக்களுடன் இணைந்து சிறப்பித்தனர்