திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடி கடைவீதியில் வலங்கைமான் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முதுபெரும் தலைவர், கேரள மாநில முன்னாள் முதல்வர் வி. எஸ். அச்சுதானந்தன் மறைவையொட்டி வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கட்சியின் ஒன்றிய செயலாளர் டி. சண்முகம் தலைமையில், செயற்குழு உறுப்பினர் பி. கந்தசாமி, விவசாய சங்க ஒன்றிய செயலாளர் கே. சுப்பிரமணியன், தலைவர் எஸ். இளங்கோவன், டிஒய்எப்ஜ ஒன்றிய செயலாளர் பி. விஜய், கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர்கள் எஸ்.எம். இளங்கோவன், ஜெ.ஜெயராஜ், மூத்த தோழர் ஆர்.ஜே. நடராஜன், டி. சுப்பிரமணியன், வாலிபர் சங்க ஒன்றிய குழு உறுப்பினர் எஸ். சபரீஸ்வரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.