தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தல் 2025கிலோ வற்றல் மஹா யாகம்..!
சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் கோலாகலம்
பக்தர்கள் திரளாக பங்கேற்பு- மஹா அன்னதானம்.
தூத்துக்குடி.
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் பக்தர்களின் வாழ்வில் செல்வம் கொழித்திட வேண்டி ஆடி அமாவாசை சிறப்பாக 2025கிலோ மிளகாய் வற்றல் மஹா யாகம் ”சாக்தஸ்ரீ” சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் சிறப்பாக நடந்தது.
தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகரில் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி, காலபைரவர் சித்தர் பீடம் அமைந்துள்ளது.
ஸ்ரீசித்தர் பீடத்தில் ஸர்வ மஹாளய அமாவாசையான ஆடி அமாவாசையை முன்னிட்டு ”உலக மக்கள் நலமாக வாழவேண்டியும், பக்தர்களின் வாழ்வில் கடன் தொல்லைகள் யாவும் நீங்கி பணம் கொழித்து, இல்லத்தில் செல்வவளம் பெருகிடவேண்டியும், வேண்டும் வரங்கள் யாவும் கிடைத்திடவும் வேண்டி ”சாக்தஸ்ரீ” சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் 2025கிலோ மிளகாய் வற்றல் மஹா யாக வழிபாடுகள் சிறப்பாக நடந்தது.
காலை 7.00மணிக்கு சிறப்பு மஹா யாகத்திற்கான வழிபாடுகள் சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் கணபதி, நவக்கிரக ஹோமம், பிரத்தியங்கிரா, காலபைரவர், வராஹி ஹோமத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து காலை 10.30மணிக்கு சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் 2025கிலோ மிளகாய் வற்றல் சிறப்பு மஹா யாகம் கோலாகலமாக நடைபெற்றது.
மதியம் 12.00மணிக்கு ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி, காலபைரவருக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16வகையான அபிஷேகமும், மதியம் 12.50மணிக்கு மஹா தீபாராதனையும் நடந்தது.
மஹா யாகத்தினை முன்னிட்டு காலை 8.00மணி முதல் மாலை 3.00மணிவரை தொடர்ந்து சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் சித்தர் பீடத்தின் சார்பில் பக்தர்களுக்கு மஹா அன்னதானம் வழங்கப்பட்டது.
யாக வழிபாட்டில் பங்கேற்ற பக்தர்களுக்கு ”சாக்தஸ்ரீ” சற்குரு சீனிவாச சித்தர் அருளாசி வழங்கினார். இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
சிறப்பு வழிபாடுகளுக்கான ஏற்பாடுகளை ”சாக்தஸ்ரீ” சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் வழிபாட்டுக் குழுவினர், மகளிர் அணியினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.