தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு 25 ஆம் ஆண்டு பொருட்காட்சி விழாவை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்து சிறப்புரை அனைத்து மக்களாலும் சிறப்பாக ஜாதி மத வேறுபாடு இன்றி கொண்டாடப்படும் விழா என புகழாரம்
தூத்துக்குடியில் உள்ள உலகப் புகழ்பெற்ற பணிமய மாதா பேராலய திருவிழா வருகிற 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கும் இந்த ஆலய திருவிழாவை முன்னிட்டு மாதாவை வழிபட்டு வரும் பொதுமக்களின் பொழுதுபோக்கிற்காக ஆண்டுதோறும் பொருட்காட்சி நடத்தப்படும் இந்த ஆண்டு 25 ஆவது ஆண்டாக பொருட்காட்சி பொருட்காட்சி குழு தலைவர் ஹெர்மன் கில்டு தலைமையிலான பொருட்காட்சி குழுவினர் நடத்துகின்றனர்
இதற்காக மாதா கோவில் அருகே உள்ள சவேரியேனா மைதானத்தில் சிறப்பாக ராட்சத ராட்டினங்கள் காஷ்மீரை போன்ற பனிக்கட்டி உலகம் மற்றும் சிறுவர் சிறுவர்களுக்கான பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய மாபெரும் பொருட்காட்சி நடத்தப்படுகிறது இந்த பொருட்காட்சியை இன்று சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார் ஊர் மக்கள் திருவிழாவாக ஜாதி மத வேறுபாடு இன்றி கொண்டாடப்படும் இந்த திருவிழா வெகு சிறப்பு வாய்ந்ததாகும் மாதாவின் அருள் அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டுமென அவர் கூறினார் அதேபோன்று பொருட்காட்சி நடத்துபவர்கள் சிறப்பாக இருக்கவும் வாழ்த்தினார்
இந்த நிகழ்ச்சியில் தொழிலதிபர் ஜோ பிரகாஷ் தலைமை வகித்தார் அருட்தந்தை சிங்கராயன் அவர்கள் சவேரியாணா இல்லம் முன்னிலை வகித்தார் நிகழ்ச்சியில் மாதா கோவில் வந்து தந்தை ஸ்டார்வின் கலந்துகொண்டு ஆசியுறை வழங்கினார்
சிறப்பு அழைப்பாளர்களாக திமுக மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் , மாநில மீனவர் அணி இணை செயலாளர் ப்ளோரன்ஸ் வட்டச் செயலாளர் டென்சிங் அங்கு பேரவையைச் சேர்ந்த நிர்மலா பங்கு பேரவை செயலாளர் எட்வின் பாண்டியன் பங்கு பேரவை துணைத்தலைவர் அண்டோ பங்கு பேரவை பொருளாளர் சோரீஸ் பங்கு பேரவை இணை செயலாளர் பெனட் பொருட்காட்சி குழுவை சேர்ந்த கிளிட்டஸ், தலைவர் ஹெர்மன் கில்ட், சசிகுமார் மகேஷ், ஹில்டன், பிண்டோ செயலாளர் சுதாகர், ஜான்சன், ஸ்டேரி மொராய்ஸ் ஹாரி மொராய்ஸ் ஜாக்சன் பெர்னாண்டோ லூகாஸ் பெர்னான்டோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்