திருவொற்றியூர் எண்ணூர் பக்கிங்காம் கேனாளில் கலந்து வரும் ஆயில் கழிவுகள் எண்ணூர் முகத்துவாரம் பகுதியில் ஆற்றில் மீன் பிடிக்கும் மீனவர்கள் பாதிப்பு
ஆயில் கழிவுகளை தடுத்து நிறுத்தவும் எந்த தொழிற்சாலைகளில் இருந்து வருகிறது என்று கண்டறியவும் ஆறு மாசுபடும் நிலையை தடுத்து நிறுத்தவும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திர்க்கு மனு கொடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்
எர்ணாவூர் பாரத் நகர் பேருந்து நிறுத்தம் அருகே சுமார் 30 க்கும் மேற்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கையில் கண்டன உரை பொருந்திய நோட்டீஸ் மற்றும் கொடிகளுடன் கண்டன முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
எண்ணூர் மீனவர்கள் வாழ்வாரத்தை பாதிக்கும் ஆயில் கழிவுகளை தடுத்து நிறுத்தவும் தொடர்ந்து பக்கிங்காம் கேனல் வழியாக எண்ணூர் முகத்துவாரத்திற்கு வரும் ஆயுள் கழிவுகளால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் நிலையை உடனடியாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கண்டன முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
பின்னர் திருவொற்றியூர் ராமகிருஷ்ணா நகரில் உள்ள மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்திற்கு சென்று அதிகாரிகளிடம் மனு கொடுத்து எண்ணூர் பகுதியில் உள்ள மீனவர்கள் பாதிப்புக்கு உள்ளாவதாகவும் அவர்கள் வைத்திருக்கும் படகுகள் மற்றும் வலைகள் ஆயில் கழுவிகளால் பாதிப்பதாகவும் ஆயில் கழுவினால் தோல் நோய் மற்றும் அந்த பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதாகவும் எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கண்டனம் முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பின்னர் அதிகாரியிடம் மனு அளித்தனர்