திருவெற்றியூர்.
திருவொற்றியூர் ஐந்தாவது வார்டுக்கு உட்பட்ட சின்ன எர்ணாவூர் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வருகின்ற 1 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பகுதி வாழ் பொதுமக்களிடம் விண்ணப்ப படிவத்தை வீடு வீடாக சென்று வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் நிலையில் அந்த முகாமில் கலைஞர் உரிமைத் தொகை ரேஷன் கார்டு , ஆதார் கார்டு , ஜாதி சான்றிதழ்களை உடனடியாக சரி பார்த்து வழங்கப்பட்டு வரும் நிலையில்
நகர்ப்புற பகுதிகளில் 13 துறைகளின் 43 சேவைகளும் வழங்கப்படுகிறது
இந்த திட்டம் மாநிலம் முழுவதும் 10,000 சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு
திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே .பி சங்கர் பகுதிச் செயலாளர் , வை மா அருள்தாசன் , முன்னாள் மாமன்ற உறுப்பினர் சொக்கலிங்கம். லயன் சங்கர். ஆகியோர் பார்வையிட்டு பொது மக்களிடம் படிவங்களை வழங்கி அவர்களது குறைகளை கேட்டு அறிந்து தேவையான உதவிகளை உடனடியாக செய்து கொடுக்க அனைத்து துறை அதிகாரிகள் மூலம் முகாம் அமைக்கப்பட உள்ளதாகவும் கலைஞர் உரிமைத் தொகை , ஜாதி சான்றிதழ் , ஆதார் கார்டு ரேஷன் கார்டில் பெயர் நீக்குதல் பெயர் சேர்த்தல் உள்ளிட்ட சான்றிதழ்களை உடனடியாக பொதுமக்களுக்கு வழங்க உள்ளதாகவும் தேவையானவர்கள் வந்து பயனடையும் படி வீடு வீடாக சென்று படிவத்தை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் திருவொற்றியூர் உதவிமாநகராட்சி ஆணையர் விஜய் பாபு. செயல் பொறியாளர். பாபு. மற்றும் அதிகாரிகள் துறை சார்ந்த ஊழியர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
SRINIVASAN
9171920032