திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் உள்ள ஓட்டல்கள், பிஸ்கட் பேக்டரி, ஸ்வீட் கடைகள், குளிர்பான கடைகள், மருந்தகங்கள், மளிகை கடைகள் உள்ளிட்ட உணவு வணிக நிறுவனங்களில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் சி.திருப்பதி, வலங்கைமான் உணவு பாதுகாப்பு அலுவலர் இ.பிரவீன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டறிந்தனர்.
மருந்தகங்களில் காலாவதியான மருந்துகள் விற்கப்படுகிறதா? கலப்பட பொருட்கள் உள்ளதா? பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுகிதா? என்பது பற்றியும் ஆய்வு நடந்தது, ஆய்வின் போது வலங்கைமான் வர்த்தக சங்க தலைவர் கே.குணசேகரன், செயலாளர் ராயல் ஜி.திருநாவுக்கரசு மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.