கம்பர் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ பேச்சியம்மன் ஸ்ரீ சுடலைமாடசாமி கோவில் மேலரத வீதியில் உள்ளது இந்த கோவில் கொடை விழா துவங்கி வருகிற ஒன்றாம் தேதி வரை நடைபெற உள்ளது இன்று மதியம் 12 மணி அளவில் கொடை விழாவை முன்னிட்டு கால் நாட்டு விழா நடைபெற்றது
வருகிற 31ஆம் தேதி வியாழக்கிழமை சீவலப்பேரியிலிருந்து தீர்த்தம் எடுத்து நிகழ்ச்சி நடைபெறுகிறது இரவு 7 மணிக்கு மாகாப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெறுகிறது ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி காலை 8 மணி அளவில் பிரசன்ன விநாயகர் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து கோவிலுக்கு கொண்டுவரப்படுகிறது
காலை 10 மணியளவில் சிறப்பு அபிஷேகமும் அதனைத் தொடர்ந்து 12 மணி அளவில் மதியக்கொடை நடைபெறுகிறது அதன் பின்பு மதியம் ஒரு மணி அளவில் ஆறுமுகம் பிள்ளை திருமண மண்டபத்தில் வைத்து மகா அன்னதானம் நடைபெறுகிறது
அன்னதானத்தை மாநகராட்சி மேயர் ஜெகன் துவக்கி வைக்கிறார். இரவு ஆறு மணி அளவில் கோவில் முன்பு உங்களிடம் நிகழ்ச்சியும் இரவு எட்டு மணி அளவில் மகளிர் அணி சார்பில் மாவிளக்கு பேரணியும் நடைபெறுகிறது
கொடை விழாவை முன்னிட்டு இன்று கால்நாட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாநகராட்சி மேயர் ஜெகன் கலந்து கொண்டார் சிறப்பு பூஜை முடிந்த பின்பு மாநகராட்சி மேயர் ஜெகனுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்