காயல்பட்டிணம்
மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கத்தில் தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு சொந்தமான இரண்டு இடங்கள் 1 -GS நம்பர்-123 சுமார் 11 ஏக்கர் 2-GS நம்பர் 105 சுமார் 38 ஏக்கர் 32 சென்ட் ஆக மொத்தத்தில் 48 ஏக்கர் 32 சென்ட் இது தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு சொந்தமான இடம் 20 ஆண்டுக்கு முன்பு விற்பனை தனி நபர்களுக்கு செய்து விட்டார்கள் என்கிற குற்ற சாட்டுகளை ஜமாத் நிர்வாகிகள் மீது செங்கை ஷர்புதீன் வைத்துள்ளனர்
மேலும் வக்பு சொந்தமான இடத்தை மீட்டு எடுக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு தொடந்து போராடி வருகிறார். இது சம்பந்தமாக வக்பு தலைமை அலுவலகத்தில் சேர்மன் நவாஸ் களியை நேரில் சந்தித்து கேள்விகளையும் கோரிக்கைகளையும் பேசிய போது செங்கை ஷர்புதீனை ஒருமையில் பேசி அவர் மீது வக்பு நிர்வாகிகளை வைத்து பிராட்வே காவல் நிலையத்தில் புகார் கொடுக்க பட்டது.
மேலும் வக்பு போர்டு சேர்மனாகவும் நாடாளு மன்ற உறுப்பினராகவும் இருக்கும் நவாஸ் கனி பொது மக்கள் கேட்டுக்கும் கேள்விகளுக்கு தகுந்த பதிலை சொல்ல வேண்டுமே தவிர ஒருமையில் பேசுவது காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வைப்பது போன்ற இத்தகை செயல் கண்டிக்க தக்க செயலாகும்.
மேலும் அரசுக்கு சொந்த மான வக்பு சொத்துக்களை மீட்டு எடுத்து அது இஸ்லாமிய ஏழை மக்களுக்கு சேர வேண்டும் என்கிற நோக்கத்தோடு களத்தில் நின்று போராடி கொண்டிருக்கும் பா ஜ க மாநில நிர்வாகி செங்கை ஷர்புதீன் மீது அச்சரபாக்கம் காவல் நிலையத்தில் தனி நபர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்ய பட்டுள்ளது. ஆகவே செங்கை ஷர்புதீன் மீது பதிவு செய்ய பட்ட வழக்கை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் சார்பில் தமிழக அரசை கேட்டு கொள்கிறோம்.
எனவே : வக்பு சொந்தமான சொத்துக்களை மீட்டு எடுக்க தொடர்ந்து போராடுபவர்கள் மீது சமூக விரோதிகளால் தாக்க படுகின்றனர் மற்றும் படு கொலைகளும் நடை பெற்று இருக்கின்றன.
குறிப்பாக சமீபத்தில் நெல்லையில் வக்பு சம்பந்தமாக போராடிய முன்னால் காவல் உதவி ஆய்வாளர் ஜாகீர் உசேன் என்பவர் படுகொலை செய்ய பட்டார். என்பதை கருத்தில் கொண்டு பா ஜ க மாநில நிர்வாகியான செங்கை ஷர்புதீனுக்கு தாமதம் இன்றி காவல் துறை பாதுகாப்பு உடனடியாக தமிழக அரசு வழங்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.
மேலும் தாமதிக்கும் பட்ச்சத்தில் செங்கை ஷர்புதீனுக்கு வேற எதும் விபரீதம் ஏற்பட்டால் அதற்கு முழு பொறுப்பு தமிழக முதல்வர் மு. க ஸ்டாலின் ஏற்று கொள்ள வேண்டும். இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.