கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கரூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ் – ன் 87வது பிறந்த தினத்தை முன்னிட்டு, கரூர் மாவட்ட பா ம க நிர்வாகிகள்
கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளியணையில் அமைந்துள்ள ராகவேந்திரா குழந்தைகள் காப்பக அறக்கட்டளையில் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் பாமக கரூர் மாவட்டச் செயலாளர் பி.எம்.கே.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது.

இந்கழ்ச்சியில், பாமக மாவட்ட தலைவர் தமிழ்மணி, வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் ரமேஷ் , மாவட்ட தலைவர் பிரபு, மகளிர் அணி மாவட்ட செயலாளர் தங்கமணி சௌந்தர்ராஜன், மாவட்டத் துணைச் செயலாளர்கள் ராஜா, முத்துகிருஷ்ணன், வேலுச்சாமி, மாவட்ட இளைஞரணி தலைவர் யாதவன், உழவர் பேரியிக்க மாவட்ட செயலாளர் தங்கவேலு,கலை இலக்கிய அணி மாவட்ட செயலாளர் ராமசாமி, வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் வழக்கறிஞர் யுவராஜ் மற்றும் அறக்கட்டளையின் நிர்வாகிகள், குழந்தைகள், பாமக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.