கே வி முகமது அரியலூர் செய்தியாளர்:-
அரியலூர் மாவட்ட தையல் தொழிலாளர் சங்கம் சிஐடியு தொழிற்சங்கத்துடன் இணைந்தது மாவட்ட பேரவை கூட்டம் அரியலூரில் உள்ள சிஐடி யு அலுவலகத்தில் நடந்தது பேரவை கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜாமணி தலைமை தாங்கினார் மாவட்ட பொருளாளர் பாரதி அனைவரையும் வரவேற்று பேசினார்
சரண்யா செலவம்பாள் கீதாபிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர் சங்கத்தின் மாநில பொருளாளர் இரா மாலதி சிறப்புரையாற்றினார் மாவட்ட செயலாளர் தோழர் துரைசாமி மாவட்ட துணைத் தலைவர் தோழர் சிற்றம்பலம் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள் செயலாளர் விஜயலட்சுமி நன்றி கூறினார்
புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது தலைவர் சரண்யா செயலாளர் செல்வாம்பாள் பொருளாளர் பாரதி துணை துணை தலைவர்கள் ராஜாமணி மகாதேவன் துணை செயலாளர்கள் மல்லிகா கற்பகம் மாவட்ட குழுவுக்கு எட்டு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்
கூட்டத்தில் இலவச தையல் மிஷின் நலவாரியம் மூலமாக வழங்க தமிழக அரசை கேட்டுக்கொள்வது கட்டுமான நல வாரியம் மூலம் வழங்கும் சலுகைகளை தையல் தொழிலாளர்களுக்கும் வழங்குவது தையல் கடைகளுக்கு இலவச மின்சாரம் வழங்க அரசை கேட்டுக் கொள்வது என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது