தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர் சனீஸ்வரர் பகவான் திருக்கோவிலில் ஆடி இரண்டாம் சனிக்கிழமையில் ஏராளமான பக்தர்கள் அலைகடலாக குவிந்து தரிசனம் செய்தனர்
தமிழகத்தில் சனீஸ்வரருக்கு தனிக் கோயில் குச்சனூரை தவிர வேறு எங்கும் இல்லை சுயம்புவாக தோன்றிய சனீஸ்வரர் சுரபி நதிக்கரையில் கிழக்கு பார்த்து அமைந்துள்ளது இந்த கோவிலின் தனிச் சிறப்பாகும். ஆண்டுதோறும் ஆடி மாதம் பெருந்திருவிழா கோவிலில் கோலாகலமாக நடைபெறும் இந்த ஆடி நான்கு சனிக்கிழமைகளிலும் நடைபெறும் திருவிழாவில் தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் பங்கேற்பர் கோவிலில் திருப்பணிகள் நடப்பதால் கொடிமரம் அகற்றப்பட்டுள்ளது
எனவே தமிழக இந்து சமய அறநிலையத் துறை திருவிழாவை கடந்த இரண்டு ஆண்டுகளாக ரத்து செய்தது இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி திருக்கல்யாணம் உள்ளிட்ட சில நிகழ்ச்சிகள் நடைபெறும் பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என கோவில் நிர்வாகத்தினர்
அறிவித்தனர் இதன்படி ஆடி மாதம் இரண்டாம் சனிக்கிழமை என்பதால் அதிகாலை 4 மணியிலிருந்து கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது சுரபி நதிக்கரையில் குளித்து காக்கை வாகனம் வாங்கி விடுவது எள்ளு பொறி போன்றவற்றை படைத்து நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்தினார்கள்
மலர் அலங்காரத்தில் இருந்த சனீஸ்வரரை நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது இதற்கான சிறப்பான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ஜெயராமன் தலைமையிலான பணியாளர்கள் வெகு சிறப்பாக செய்து இருந்தனர் மேலும் பக்தர்களின் வசதிக்காக சின்னமனூர் போடிநாயக்கனூர் தேனி ஆகிய மாவட்டத்தின் முக்கிய நகரங்களில் இருந்து குச்சனூருக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் பக்தர்கள் வசதிக்காக இயக்கப்பட்டன.