கம்பம் ராம் ஜெயம் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஹெல்த் பற்றிய விழிப்புணர்வு கண்காட்சி
தேனி மாவட்டம் கம்பம் ராம் ஜெயம் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஹெல்த் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் உடலின் பாகங்கள் மற்றும் அவர்கள் உண்ணும் உணவு பழக்க வழக்கங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவு மற்றும் நன்மை தரக்கூடிய உணவுகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி கண்காட்சியில் புகைப்படங்கள் வைக்கப்பட்டு மாணவர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது
மேலும் இந்த நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளுக்கு இது சம்பந்தப்பட்ட போட்டிகள் நடத்தப்பட்டு இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினாராக பங்கேற்ற பாண்டிச்சேரி மஹாத்மா காந்தி மெடிக்கல் ரிசெர்ச் இன்ஸ்டிடியூட் டாக்டர் ஜி ராகேஷ் குமார் மாணவர்களுக்கு பரிசினை வழங்கி மனதார வாழ்த்தினார்
மேலும் மாணவர்களின் உடல்நலம் ஹெல்த் பற்றிய மாணவ மாணவிகளின் கேள்விகளுக்கு பதிலளித்தும் மிகவும் கருத்துள்ள கேள்விகளை கேட்ட மாணவிகளை பாராட்டினார்
இந்த நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் கவிதா சௌந்தரராஜன், பள்ளி முதுநிலை முதல்வர் ஸ்வாதிகா, முதல்வர் கயல்விழி, பள்ளியின் இயக்குனர் ஜெய ஷிவானி உள்பட பள்ளியின் இருபால் ஆசிரியர்கள் மாணவர்கள் மாணவர்களின் பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்