சங்காபிஷேகம் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேக பூஜைகள் தற்போது சிறப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளை ஆடிப்புரம் நடைபெறுவதை முன்னிட்டு 1008 சங்காபிஷேக பூஜைகள் இன்று முதல் தொடங்கிய நிலையில் நாளை காலை 7 மணி முதல் யாகசாலை பூஜைகள் தொடங்கி12 மணி அளவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று பின்பு யாகசாலையில் உள்ள 1008 சங்காபிஷேகங்களில் உள்ள தீர்த்தங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்று சிறப்பு தீபாராதனைகளுடன் பக்தர்களுக்க பிரசாதம் வழங்கப்பட உள்ளது மேலும் நாளை ஆடிப்பூரத்தை முன்னிட்டு பக்தர்கள் அம்மனுக்கு வளையல்களை வழங்குவார்கள்