தஞ்சாவூர் மாவட்டம்: கும்பகோணம் வள்ளலார் லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா ஞாயிற்றுக்கிழமை வள்ளலார் பள்ளி அண்ணா அரங்கில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
விழாவுக்கு, சங்கத் தலைவர் ஸ்தபதி விஜயன் தலைமை தாங்கினார். . செயலாளர் கணேசன் திட்ட அறிக்கை வாசித்தார்.
இந்த ஆண்டிற்கான புதிய தலைவராக சரவணன், செயலாளராக கருணாகரன், பொருளாளராக சிவராமகிருஷ்ணன்,ஆகியோர் பொறுப்பேற்று கொண்டனர். அவர்களை லயன்ஸ் சங்க முன்னாள் மாவட்ட ஆளுநர் கார்த்திக்பாபு பதவியில் அமர வைத்தார். தொடர்ந்து ஏ ஓ இராஜன் புதிய உறுப்பினர்களை இணைத்து வைத்தார்.
சங்க சேவைத் திட்டங்களை, தலைமைப்பண்பு மாவட்ட தலைவர் இராஜதுரை,தொடக்கி வைத்தார்.மாவட்ட செகரட்டரி பாஸ்கரன்,லயன் ஷேர் செல்வம், மீனா செல்வம் ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள் மண்டல தலைவர் ரமேஷ் ,மாவட்ட அலுவலர் சசிதரன் ,வட்டாரத் தலைவர் பன்னீர்செல்வம். ஐயர் வாழ்த்துரை ஆற்றினார்கள்.
நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர்கள், உறுப்பினர்கள்,மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை கும்பகோணம் வள்ளலார் லயன்ஸ் சங்க சாசனத் தலைவர் இரவி செய்திருந்தார்.