ஜெகன்நாத் பிராபர்ட்டீஸ் சார்பாக நடைபெற்ற இதில், திரளான பக்தர்கள் பங்கேற்பு
சிவபெருமானுக்கு செய்யப்படும் சிறப்பு அபிஷேகமாக மகா ருத்ராபிஷேகம் செய்யப்படுகிறது செல்வச் செழிப்பு, நோயற்ற வாழ்வு, மன அமைதி, பாவங்கள் நீங்குதல் போன்ற பலன்கள் நோக்கி,சிவபெருமானுக்கு
மகா ருத்ராபிஷேகம் செய்யப்படுகிறது..
இந்நிலையில் ஜெகன்நாத் பிராபர்ட்டீஸ் சார்பாக , மஹா ருத்ராபிஷேகம் பூஜைகள் மற்றும் ஒரு லட்சம் ருத்ர ஜப பாராயணம் கோவை ஆர்.உஸ்.புரம் பகுதியில் உள்ள இராஜஸ்தானி சங்க அரங்கில் நடைபெற்றது…
ஜெகன்நாத் பிராபர்ட்டீஸ், குரோசோ நிறுவனம் மற்றும் கியா ஸ்டுடியோ கிட்ச்சன் வார்ட்ரோப்ஸ் ஆகியோர் இணைந்து நடத்திய இதில், நாட்டின் அனைத்து நதிகளிலும் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர், பசும்பால், தாமரை, தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் பன்னீர், திருமஞ்சனம், சந்தனம், பழரசம், வீபூதி, கரும்புசர்க்கரை, அரிசி மாவு, தேன், நெய், முதலிய பொருட்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது…
சிவ லிங்கத்தை பக்தர்களே அபிஷேகம் செய்யும் வகையில் நடைபெற்ற இதில்,மேடையில் வைக்கப்பட்டருந்த சிவ லிங்கத்திற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரவசத்துடன் அபிஷேகம் செய்தனர்…
ஸ்வரண மாதத்தில், சிவனை பூஜித்தால் காசி முதல் ராமேஸ்வரம் வரையான, 12 ஜோதிர் லிங்கங்களை தரிசனம் செய்த நற்பலன்கள் கிடைக்கும். இந்த மஹா ருத்ராபிஷேகத்தில், பல்வேறு விதமான அபிஷேகங்கள் கிடைக்கும் என்பதின் அடிப்படையில் இந்த மகா ருத்ராபிஷேகம் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளதாக ,
ரமேஷ் டைபர்வால்,மற்றும் அனுராக் டைபர்வால் ஆகியோர் தெரிவித்தனர்..
நிகழ்ச்சியின் இறுதியாக மாலை மஹா அலங்காரம்,செய்யப்பட்டு மஹா தீபாரதனை நடைபெற்றது இதனை தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது…