தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூா் இஸ்லாமிய குழந்தைகள் அமைப்பு- CIO சார்பாக ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணியின் – தஞ்சாவூர் பொறுப்பாளர் பாத்திமா மற்றும் தன்ஸீலா ஆகியோர் தலைமையில் சிறப்பு குழந்தைகள் பேரணி நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சாலிடாரிட்டி மாநில தலைவர் முகமது ரியாஸ், தஞ்சாவூர் மேயர் சண். ராமநாதன் மற்றும் சமூக ஆர்வலர் ஜலாலுதீன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுக் கொண்டனர்.
நாடு முழுவதும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக பத்து லட்சம் மரக்கன்றுகளை நடும் இலக்கோடு தஞ்சையில் நடைபெற்ற பேரணி சின்ன அரிசிகார தெரு பீப்பிள் வெல்ஃபேர் சென்டரில் துவங்கியது. பெரிய சாலை ரோடு, சையது அலி பாபா தெரு, ஆட்டுமந்தை தெரு, மகர்நோம்பு சாவடி வழியாக மீண்டும் சின்ன அரிசிகாரத் தெருவில் உள்ள பீப்புள் வெல்பர் சென்டரில் நிறைவடைந்தப் பேரணியில் சுமார் 100 க்கும் மேற்பட்ட குழந்தைகள், இளைஞர், பொது மக்கள் பங்கேற்றனர்.
தஞ்சையில் உள்ள பள்ளிகள், பூங்காக்கள், போன்ற பொது இடங்களில் மரக்கன்றுகள் குழந்தைகள் முலம் நடப்பட்டுள்ளது, மேலும் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.