கே வி முகமது அரியலூர் செய்தியாளர்:-
அரியலூரில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் அரியலூரில் நடந்தது மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கறிஞராக பணியாற்றுபவர் வாஞ்சிநாதன் இவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உள்ளது அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி வருகிறார்
இந்நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி ஜி ஆர் சாமிநாதன் தானே இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என கூறுகிறார் இதை கண்டித்து அரியலூர் வழக்கறிஞர்கள் அரியலூர் நீதிமன்ற வளாகதில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
ஆர்ப்பாட்டத்திற்கு வழக்கறிஞர் சங்க தலைவர் இரா மனோகரன் தலைமை தாங்கினார், செயலாளர் ராஜா பொருளாளர் கமலக்கண்ணன் முன்னாள் செயலாளர் முத்துக்குமார் ராஜசேகர் மணிகண்டன் செல்வமணி நூர்தின் ராஜா அன்பரசு மூகாம்பிகை அருணன் உட்பட ஏராளமான வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்
சுமார் ரெண்டு மணி நேரம் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது ஆர்ப்பாட்டம் நபடைபெறுவதை ஒட்டி நீதிமன்ற வளாகம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்