தேனி வடக்கு மாவட்ட திமுக செயல் வீரர்கள் கூட்டம் தேனி மாவட்டம் வீரபாண்டியில் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி தலைமையில் வடக்கு மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் நடை்பெற்றது
இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி
ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இதுவரை நடைபெற்ற பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது மேலும் இனிவரும் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய கட்சிப் பணிகள் குறித்து எம் பி விரிவாக விளக்கி பேசும்போது
ஓரணியில் தமிழ்நாடு கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளான
திமுகவின் பழைய உறுப்பினர்களை புதுப்பித்திடல் வேண்டும்
திராவிட மாடல் அரசின்நான்காம் ஆண்டு சாதனைகளை எடுத்துக் கூறி பொதுமக்கள் திராவிட இயக்கமான திமுகவில் உறுப்பினர்களாக சேர்ந்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்களிடம் மொபைல் நம்பரை மட்டும் பெற வேண்டும் ஓ டி பி நம்பர் வாங்க தேவையில்லை அந்த எண்ணைப் பயன்படுத்தி அதிகபட்சம் 2 உறுப்பினர்கள் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். இதுவரை ஒரே குடும்பத்தில் அதிக உறுப்பினர்கள் ஒரே மொபைல் எண்ணில் சேர்க்கப்பட்டிருப்பின்
இரண்டு நபர்களுக்கு மேல் உள்ள குடும்பத்தில் ஒவ்வொரு இரண்டு நபருக்கும் ஒரு மொபைல் நம்பர் பெற வேண்டும்.
பிறகு அதே எண்ணில் இருந்து உறுப்பினர் சேர்க்கை உறுதிபடுத்தலுக்காக செல் நம்பர் 9489094890 என்ற எண்ணிற்கு ஒரு மிஸ்டு கால் பெற வேண்டும் வடக்கு மாவட்டத்தில் அதிகப்படியான பொது மக்களை திமுகவில் சேர்க்க கட்சியின் நிர்வாகிகள் பாடு விட வேண்டும் என்று எம் பி வலியுறுத்தி பேசினார்
இந்த கூட்டத்தில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் பெரியகுளம் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் கே.எஸ். சரவணக்குமார் வடக்கு மாவட்ட மாவட்ட கழக அவைத் தலைவர் பி.டி.செல்லபாண்டியன் போடி சட்டமன்ற தொகுதி தேர்தல் பார்வையாளர் மாநில திமுக கலை இலக்கிய பேரவையின் துணைச் செயலாளர் நேரு பாண்டியன்
பெரியகுளம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பார்வையாளர் முத்துராமலிங்கம்
மாவட்ட துணைச் செயலாளர் அறங்காவல் குழு தலைவர் ராசி, செந்தில் முருகன்
மாநில செயற்குழு உறுப்பினர்கள் எம். சங்கர் முருகேசன் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜ.ரமேஷ் தேனி தெற்கு ஒன்றியச் செயலாளர் ரத்னசபாபதி பேரூர் திமுக செயலாளர் செல்வம் பேரூராட்சி மன்ற தலைவர் கீதா சசி ஒன்றிய நகர பேரூர் பகுதி கழக செயலாளர்கள் சார்பு அணியின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்