கே வி முகமது அரியலூர் செய்தியாளர்:
அரியலூர் வட்டம் அமீனாபாத் கிராமத்தில் திருத்தேர் திருவிழா
அரியலூரை அடுத்துள்ள அமீனாபாத் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஆதி சக்தி மாரியம்மன் ஆலய திருத்தேர் திருவிழா சிறப்பாக நடந்தது கடந்த வியாழக்கிழமை காப்பு கட்டும் திருவிழா துவங்கியது மறுநாள் வெள்ளிக்கிழமை ஸ்ரீ மாரியம்மன் கோவில் வளாகத்தில் பொதுமக்கள் பொங்கல் வைத்தனர் பொங்கல் வைத்து சிறப்பாக கொண்டாடினர்
சனிக்கிழமை சுவாமி திருவீதி உலா நடந்தது அதனை தொடர்ந்து மிரட்டல் பாய்ஸ் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடந்தது ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ முனியப்பா கோவிலில் பொங்கல் வைத்து இருட்டு பூஜை வான வேடிக்கை நடந்தது
திங்கட்கிழமை 28/7/2025 தேர் திருவிழா சிறப்பாக நடந்தது கிராம பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுத்து ஊர் முழுவதும் சுற்றி வந்தனர் அதனை தொடர்ந்து மாலையில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது நாளை செவ்வாய்க்கிழமை ஏகாந்த சேவையும் மஞ்சள் நீராட்டு விழாவும் சிறப்பாக நடைபெறுகிறது தேர் திருவிழாவில் அமீனாபாத் கிராமத்தை சுற்றியுள்ள 20 கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்
பின்பு சுவாமி தரிசனம் செய்தனர் பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது கிராமம் முழுவதும் அலங்கார தோரணங்களும் வண்ண வண்ண விளக்குகளும் ஒளிமயமாக காட்சி அளிக்கிறது தேர் திருவிழாவை ஒட்டி ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்