திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள பாடகச்சேரி மகான் ஶ்ரீ-ல- ஸ்ரீ இராமலிங்க சுவாமிகள் அருள் புரிந்த தவபீடத்தில் 76- ஆம் ஆண்டு குருபூஜை விழாவில் முதல் நாளான நேற்று 27- ந்தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 7- மணிக்கு வள்ளலார் வழி வல்லநாட்டு சித்தர் சாது சிதம்பர சுவாமிகள் ஏற்படுத்திய சிதம்பர சக்கரத்தில் 108 தீப வழிபாடும், உடன் புதுக்கோட்டை பெரியநாயகி அவர்களின் அகவல் பாராயணம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பாடகச்சேரி மகான் ஶ்ரீ-ல- ஸ்ரீ இராமலிங்க சுவாமிகள் கிராம அன்னதான மற்றும் கல்வி அறக்கட்டளை, கிராமவாசிகள் & நேதாஜி இளைஞர் நற்பணி மன்றத்தினர் சிறப்பாக செய்து இருந்தனர்.