மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராஹிம்
தென்காசி தென்காசி மாவட்டம் தென்காசி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் புதியதாக கட்டப்பட்ட மார்க்கெட் கட்டிடத்தில் ஏற்கனவே வியாபாரம் செய்த வியாபாரிகளுக்கு கடைகளை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி தினசரி சந்தை காய்கனி வியாபாரிகள் ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இன்று காலை முதலே போராட்டத்தில் ஈடுபடுவதற்காக வியாபாரிகள் நகராட்சி பூங்காவில் முன்பாக வரத் தொடங்கிய நிலையில் ஒருநாள் கடையடைப்பானது தொடர்ந்து நடைபெறுகிறது இதில் நகராட்சி ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாகவும் ஏற்கனவே கடைகளை பயன்படுத்தி அவர்களுக்கு இடத்தை ஒதுக்கீடு செய்யாமல் புதியவர்களுக்கு கடை ஒதுக்கீடு செய்யும் சூழ்நிலை ஏற்படுவதை அறிந்து முன்கூட்டியே இந்தப் போராட்டத்தை முன்னெடுத்ததாகவும் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.இதனால் இப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.