விருத்தாசலம்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த தே. கோபுராபுரம் கிராமத்தில் பல நாட்களாக குடிநீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கிராம பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து 50க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டதால்போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
பலமுறை கூறியும் குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து காலையில் பள்ளி வாகனம் பேருந்துகளை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டதால் காவல்துறையினர் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மக்கள் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.