சென்னை துறைமுகம் முதல் எண்ணூர் துறைமுகம் வரை தேசிய நெடுஞ்சாலைதுறல சார்பில் நாலு வழி சாலை அமைக்கப்பட்டுள்ளது தினசரி இந்த சாலையில் நூற்றுக்கணக்கான கன்டெய்னர் லாரிகள் சென்று வருகின்றன
இந்த சாலையில் சர்வீஸ் சாலை இல்லாததால் இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் நீண்ட தூரம் சென்று திரும்ப வேண்டியது சூழல் உள்ளது தொடர் விபத்துகளும் நடந்துள்ளன இந்த பகுதியில் இரண்டு இடங்களில் ரவுண்டானாவும் சிக்னல் அமைக்க பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர்
ஆனால் இது குறித்து தேசிய நெடுஞ்சாலை துறை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாமன்ற உறுப்பினர் ஆர் ஜெயராமன் தலைமையில் அனைத்து நகர் நல சங்கங்களை இணைத்து இந்த பிரச்சனைக்காக தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்துவதாக அறிவித்து அந்த இடத்தில் சாலையில் காத்திருந்தனர் தேசிய நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் பழனிசாமி அவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை தொடர் போராட்டம் நடைபெறும் என மாமன்ற உறுப்பினர் ஜெயராமன் தெரிவித்தார்.