கே வி முகமது அரியலூர் மாவட்ட செய்தியாளர்:
அரியலூர் மாவட்ட மதிமுக செயலாளர் ராமநாதன் தலைமையில் நகர மதிமுக செயலாளர் வழக்கறிஞர் இரா மனோகரன் முன்னிலையில் அரியலூர் மாவட்ட காவல் துறை அதிகாரி விஷ்வேஷ்பாலசுப்பிரமணியன்சாஸ்திரி அவர்களை சந்தித்து புகார் மனு அளித்தனர்
அந்த புகார் மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கட்சியின் முதன்மை செயலாளர் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரைவைகோ ஆகியோரை பற்றி கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நாஞ்சில் சம்பத் தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் பகுதியைச் சேர்ந்த பஷீர் இவர்கள் இருவரும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ துரைவைகோ எம்பி அவர்களை ஜாதியைப் பற்றியும் வன்மத்தை தூண்டும் வகையிலும் ஜாதியால் திட்டி கலவரத்தை தூண்டும் வகையில் ஊடகங்களில் பேட்டி கொடுத்தும் பேசியும் வருகிறார்கள்
இவர்கள் இருவரும் ஏற்கனவே மதிமுகவில் பொறுப்பு வகித்து கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மேலும் இவர்களது ஊடகப் பேட்டிகளில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களையும் கொன்று விடுவதாக கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசி வருகின்றனர்
இவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்குமாறும் இவர்கள் பேட்டி கொடுத்த இணையதள கணக்குகளை முடக்கி வைக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம் இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர் பொதுக்குழு உறுப்பினர்கள் தங்கராசு மோகன் தாஸ் கொளஞ்சி சிவகுமார் ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை கவிஞர் எழிலரசன் ராமச்சந்திரன் பழனிச்சாமி ரமேஷ்பாபு நகர நிர்வாகிகள் டைலர் மகாலிங்கம் சுந்தர் குமார் அய்யாதுரை தொண்டரணி சசிகுமார் இலக்கிய அணி கோதண்டபாணி சுந்தரமூர்த்தி பாலகிருஷ்ணன் உட்பட ஏராளமானோர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் மனு கொடுக்கும் போது உடன் இருந்தனர்