கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அகரம் அடுத்த சுண்டகப்பட்டி கிராமத்தில் இன்று காலை ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா ஊர் கவுண்டர் ராஜா தலைமையில் நடைபெற்றது முன்னதாக காலை கணபதி பூஜையுடன் வேள்வி பூஜை தொடங்கியது.

இதில் யாகசாலையில் களசஸ்தாபனம், மூல மந்திர ஹோமம் பூர்ணஹுதி, உபச்சார ராகதாள வழிபாடு நடத்தப்பட்டது.பின்னர் வேள்வியில் பூஜிக்கப்பட்ட கலசங்களை எடுத்துக் கொண்டு ஊர்வலமாக கோபுரத்திற்கு எடுத்து சென்று வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் புனித நீரை கோபுர கலசங்களுக்கு ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர் பின்னர் அனைவருக்கும் தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டு அன்னதானம் வழங்கினர் இதில் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் விழாவை ஊர் பொதுமக்கள் சார்பில் கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *