சத்தியமங்கலம் அருகே உள்ள தனவாசியில் ஒரு கோடி சிவலிங்கம் ஆலயம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இக் கோயில் வளாகத்தில் 18 டன் எடையுள்ள கல்லில் 18 உயரத்தில் . சிவலிங்கள் வடிவமைக்பட்ட கைலாச அதிபதீஸ்வரர் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக
மாலை 4 மணிக்கு மேல் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, சங்கல்பம் புன்யாக வாசனம் ஸ்ரீ மகா கணபதி ஹோமம். ஸ்ரீ நவக்கிரஹ ஹோமம், ஸ்ரீ மஹாலக்ஷ்மி ஹோமம் வாஸ்து சாந்தி, பிரவேசபலி, முதற்கால யாகசாலை பூஜை, திரவ்யாஹீதி, பூர்ணாஹீதி, திபாராதனை பிரசாதம் வழங்குதல். இரவு 9 மணிக்கு மேல் யந்திர ஸ்தாபனம், பிம்பஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல், ஞாயிற்றுக் கிழமை, காலை 3.00 மணிக்கு மேல், மங்கள இசை விக்னேஸ்வர பூஜை, இரண்டாம் காலயாக சாலை பூஜை, திரவ்யாஹீதி நாடிசந்தானம், ஸ்பர்ஸாஹீதி, வஸ்த்ராகுதி பூர்ணாஹுதி, தீபாராதனை இடம் எழுந்தருளுல், காலை 5.30 மணிக்கு மேல் கைலாச அதிபதீஸ்வரர் சுவாமிக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு மஹாபிஷேகம் தீபாராதனை மற்றும் சிறப்பு அன்னதானம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது .