துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் ஸ்ரீ பாக்கியலட்சுமி திருமண மஹாலில் புதிய “துறையூர் ஸ்ரீ திருமலா ரோட்டரி சங்கம்” துவக்க விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு விழா மாலையில் நடைபெற்றது.
விழாவில் சங்கத் தலைவராக ஆர் சரவணன், செயலாளராக என் அரவிந்தன், பொருளாளராக எம் ஜெகதீஸ்வரன் (எ) இளையராஜா ஆகியோர் புதிய நிர்வாகிகளாக பணி ஏற்று கொண்டனர். விழாவில் மாவட்ட ஆளுநர் ஜே கார்த்திக் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இதில் மாவட்ட பொது செயலாளர் ஜெ. அரவிந்தன், மாவட்ட செயலாளர்-நிர்வாகம் டி ரமேஷ், மண்டல ஒருங்கிணைப்பாளர் ஜி பாபு, மாவட்டத் துணை ஆளுநர் ஆர் ராமகிருஷ்ணன், மாவட்ட செயலாளர்-சங்க ஆலோசகர் எஸ் அசோக் பெரியசாமி, மாவட்ட செயலாளர்-புதிய சங்கங்கள் துவக்குதல் வி முருகானந்தம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
விழாவில் ஒருங்கிணைப்பாளர் ஏ சுந்தர்ராஜ், சங்க இயக்குனர்கள் ராம்குமார், கிருபா, மதன்பாபு, வினோத், முகுந்தன்,கார்த்திகேயன், மற்றும் சங்க திட்ட தலைவர்கள் ஆனந்த், முரளி பிரசாத், ராமராஜு, மகேஸ்வரன், கே.ராமராஜ், நாகராஜு, சஞ்சித், விஜயகுமார், சுரேஷ், பிரசாந்த், பத்மநாபன், சுரேஷ்குமார், ராமநாதன், பி.பாஸ்கர், விஜயகுமார், வசந்தகுமார், பாஸ்கர், வீரப்பன் ஆகியோர் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
மேலும் விழாவில் பெரம்பலூர், அரியலூர், துறையூர் கோல்டன் சிட்டி ரோட்டரி சங்க நிர்வாகிகள் , துறையூர் ரோட்டரி சங்கம், துறையூர் பெருமாள் மலை ரோட்டரி சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவில் புதிய நிர்வாகிகளுக்கு “நேம் போர்டு” சான்றிதழ்கள் வழங்கி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்