திண்டுக்கல் மாவட்டம், கசவனம்பட்டியில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
மேலும், கசவனம்பட்டி மற்றும் குரும்பப்பட்டியில் தலா ரூ.12.67 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நியாயவிலைக் கடை கட்டடங்களை திறந்து வைத்து, கசவனம்பட்டியில் ரூ.80 இலட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி, திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர்.சக்திவேல் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.