எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த புங்கனூரிலிருந்து ஆதமங்கலம் வரை மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு கிராமபுற இணைப்பு சாலை புதுப்பிக்கும் பணி கடந்த பத்துமாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.புங்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட காடாகுடியில் குறுக்கே செல்லும் முடவன்வாய்க்கலில் புதிய பாலம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருவகிறது.

இந்த சாலை ஆதமங்கலம்,பெருமங்கலம்,கோடங்குடி,தேனூர்,கொண்டல் உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட கிராமங்களை இணைக்கும் பிரதான சாலையாக உள்ளது.இந்த கிராமங்களை சேர்ந்தவர்கள் வைத்தீஸ்வரன் கோவில்,சீர்காழி,மயிலாடுதுறை செல்லவும் பள்ளி,கல்லூரி,மருத்துவம் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

இன் நிலையில் முடவன் வாய்காலில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் பாலத்திற்கு அருகே தற்காலிக சாலை அமைத்து பொதுமக்கள் பயன்படுத்திவந்தனர்.நேற்று பொதுப்பணித்துறையினர் அந்த தற்காலிக சாலை ஜேசிபி இயந்திரம் கொண்டு அகற்றியுள்ளனர்.இதனால் இரு புறமும் சென்று வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பள்ளிக்கு சென்ற மாணவர்கள் கட்டி முடிக்கப்படாத பாலத்தை பெற்றோர்கள் மற்றும் இளைஞர்களின் உதவியுடன் ஆபத்தான முறையில் கடந்து செல்கின்றனர்.இது குறித்து ஒப்பந்தகாரரிடம் கூற பல முறை செல்போனில் தொடர்பு கொண்டும் அவர் அழைப்பை ஏற்க வில்லை,சில மாணவர்கள் முதியவர்கள் வாய்க்காலில் விழுந்ததாக கூறும் கிராமமக்கள்.மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தாமதமாக நடைபெறும் சாலை மற்றும் பாலம் அமைக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும்.மேலும் நாங்கள் சென்று வர மாற்று வழி ஏற்பாடு செய்து தர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *