சீர்காழி அருகே ஸ்ரீ மந்தகருப்பண்ண சுவாமி கோயில் முளைப்பாரி திருவிழாதிரளான பக்தர்கள் முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி  அடுத்து திருமுல்லைவாசலில் பழமையான ஸ்ரீ மந்தக்கருப்பண்ண சுவாமி, ஸ்ரீ காளியம்மன் மற்றும் ஸ்ரீ ஏழைக்காத்தம்மன் 
திருக்கோயில்கள் அமைந்துள்ளது.

பலநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலின் ஆண்டு தோறும் அடி மாதம் ஆண்டுத்திருவிழா  கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். 

இவ்வாண்டு கோயிலின்  ஆண்டுத் திருவிழா கடந்த ஜுலை 27 ஆம் தேதி பந்தல் கால் முகூர்த்தத்துடன் தொடங்கியது அதனை தொடர்ந்து, முளைப்பாரிகளுக்கு தேவையான நவதானியங்கள் கடந்த ஜூலை 29 -ம் தேதி கோயில் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. அதனை பக்தியுடன் பெற்று கொண்ட பக்தர்கள் தங்கள் வீடுகளுக்கு எடுத்துச்சென்று ஒரு வார காலம் விரதம் இருந்து முளைப்பாரி வளர்த்து வந்தார்.

தொடர்ந்து செவ்வாய் இரவு திருமுல்லைவாசல் கடற்கரையில் இருந்து சக்தி கரகம் எடுத்துவரப்பட்டது. அதனையடுத்து வீடுகளில் வளர்க்கப்பட்ட  முளைப்பாரிக்கு சிறப்பு படையலிட்டு பக்தர்கள் மேளதாள மங்கள வாத்தியங்கள் முழங்க கோலாட்டத்துடன், சக்தி கரகம் முன் செல்ல, முலைப்பாரிகளை தலையில் சுமந்து ஏராளமான பக்தர்கள் ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்து வந்தனர். பின்னர் பெண்கள், ஆண்கள் ஒன்றாக இணைந்து கும்மியடித்து குலவை இட்டு வழிபாடு செய்தனர்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *