அலங்காநல்லூர்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் சேந்தமங்கலம் ஊராட்சியில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து முகாமைப் பார்வையிட்டார்..
இதில் வாடிப்பட்டி வட்டாட்சியர் ராமச்சந்திரன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பார்த்திபன், வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுந்தர்ராஜன், கண்ணன், திமுக ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், முத்தையன், அருண்குமார், அலங்காநல்லூர் பேரூராட்சி தலைவர் ரேணுகாஈஸ்வரி கோவிந்தராஜ், ஒன்றிய துணைச் செயலாளர் அலெக்ஸ்பாண்டியன், ஒன்றிய பொருளாளர் சுந்தர்ராஜன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் தனுஷ்கோடி,காயத்ரி இதயச்சந்திரன் அரசு வழக்கறிஞர் பார்த்தசாரதி, விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளர் பிரதாப்,ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சந்தனகருப்பு, சோழவந்தான் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் தவசதீஷ்,சத்திரவெள்ளாளப்பட்டி திமுக கிளை கழக செயலாளர் சுபாஷ்மதுரைவீரன், பொறியாளர் அணி பாலகிருஷ்ணன்,உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில் வருவாய்த்துறை சுகாதாரத்துறை பிற்பட்டோர் நலத்துறை ஆதிதிராவிடர் நலத்துறை மாற்றுத்திறனாளிகளுக்கான துறை சிறப்பு திட்ட செயலாக்கு துறை உள்ளிட்ட பல்வேறுதுறைகளின் சார்பில் மனுக்கள் பெறப்பட்டது. நிகழ்ச்சி முடிவில் ஊராட்சி செயலர் ஆண்டிச்சாமி நன்றி கூறினார்..