திருவாரூர் மாவட்டம் குடவாசலில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையம் மற்றும் நெல் கிடங்கிற்கு செல்லும் சாலை இரண்டு அடி, மூன்று அடி வரை குண்டும் குழியுமாக உள்ளதால், இந்த நெல் கிடங்கில் 45 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் இருப்பு வைத்திருக்கும் திறன் கொண்ட இந்த கிடங்கில் இருந்து நெல் அறவைக்காக வெளியே எடுத்து செல்ல ஒரு நாளைக்கு 200 லாரிகள் வந்து செல்கின்றனர்.
அவைகள் அடிக்கடி சாலையில் உள்ள குழிக்குள் சிக்கி கொள்வதால் நெல் மூட்டைகள் சேதாரம் அடைவதோடு, சுமை தூக்கும் பணியாளர்கள் பெரும் அவதிக்கு ஆளாகின்றனர். இதேபோல் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு நெல் கொண்டு வரும் விவசாயிகள் நிலையும் படும் மோசமான நிலையில் உள்ளது.
இது குறித்து அப்பகுதியில் உள்ள விவசாயிகள் திருவாரூர் வடக்கு மாவட்ட பாமக செயலாளர் வேணு. பாஸ்கரன் அவர்களிடம் குடவாசல் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் மற்றும் நெல் கிடங்கிற்கு செல்லும் சாலை குறித்து பேசினார். இதனையடுத்து திருவாரூர் வடக்கு மாவட்ட பாமக செயலாளர் வேணு. பாஸ்கரன் நேரில் சென்று பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- குடவாசல் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் மற்றும் நெல் கிடங்கிற்கு செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் இரண்டு அடி, மூன்று அடி வரை பள்ளங்கள் நிறைந்த உள்ளதால் இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பார்வையிட்டு போர்க்கால அடிப்படையில் சாலைகளை செப்பனிட வேண்டும்,
அதில் சட்ட காலதாமதம் ஏற்பட்டால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைத்துவோம் என கூறினார். உடன் உழவர் பேரியக்கத்தின் மாவட்ட செயலாளர் கே.எஸ்.பி. உலகநாதன், பாமக திருவாரூர் வடக்கு மாவட்ட தலைவர் பி.எஸ்.பழனி, வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் கணேச.சண்முகம், மற்றும் சத்தியமூர்த்தி, முருகேசன், ஜெயவீரன், பாலாஜி, சிவபிரகாஷ் உள்ளிட்ட பலர் இருந்தனர்.