தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் கார்டமம் பிளாண்டர்ஸ் அசோசியேசன் கல்லூரியில் மகளிர் மையம் சார்பாக செறிவூட்டப்பட்ட உணவுத்திருவிழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது
இந்த விழாவிற்கு கல்லூரியின் தலைவர் எஸ் வி சுப்பிரமணியன் செயலாளர் மற்றும் தொடர்பாளர் ஆர் புருஷோத்தமன் ஆகியோர் தலைமையில் உப தலைவர் எஸ். ராமநாதன் கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ் சிவக்குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது கல்லூரியின் மகளிர் மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் உதவிப் பேராசிரியர் எஸ் விஜயலட்சுமி அனைவரையும் வரவேற்றார். விழாவின் துவக்கமாக கல்லூரியின் மகளிர் மையத்திற்கு தனித்துவமான இலச்சினை லோகோ வெளியிடப்பட்டது
மகளிர் மைய ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் முனைவர் உதவி பேராசிரியர் ஆர் கார்த்திகா விழாவில் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்.nutritonist functional wellness coach அதிபர் கே கிருஷ்ண பிரியா பாலாஜி சிறப்பு விருந்தினராக நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.
அவர் பேசும்போது மாறிவரும் உலகில் உணவே விஷமாகி போகிற காலத்தில் செறிவூட்டப்பட்ட உணவுகளின் முக்கியத்துவம் குறித்தும் அதனை தவிர்ப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் மாணவிகளுக்கு விரிவாக விளக்கிப் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மாணவிகள் பங்கேற்று பாரம்பரியமிக்க தமிழர்களின் சத்துள்ள செறிவூட்டப்பட்ட உணவுகளை தயார் செய்து உணவு கண்காட்சியில் வைத்து சிறப்பாக நடத்தினார்கள் கல்லூரி மாணவ மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்
மேலும் மேலும் கண்காட்சியில் சிறப்பாக உணவு தயார் செய்த மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி ஊக்குவிக்கப்பட்டன. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி கண்காணிப்பாளர் யுவராஜா தலைமையில் கல்லூரி பேராசிரியர்கள் மாணவிகள் வெகு சிறப்பாக செய்திருந்தனர் கல்லூரியின் பேராசிரியை டி. பாண்டி மீனா நன்றி கூறினார்.