திருவொற்றியூர்
திருவொற்றியூர் ராஜா சண்முகம் நகர் பகுதியில் நடைபெற்ற இந்த சிறப்பு முகாமில் 15 துறைகளின் 46 சேவைகளும் நகர்ப்புற பகுதிகளில் 13 துறைகளின் 43 சேவைகளும் வழங்கப்படுகிறது இதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி திருவெற்றியூர் சென்னை மாநகராட்சி 1 வது மண்டலம் 6 வது வார்டு உங்களுடன் ஸ்டான்லின் திட்டம் சிறப்பு முகாம் நடைப்பெற்றது
இந்த தமிழக அரசின் உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்ட முகாமில் ஆயிரக்கணக் கான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையும் வகையில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது ஊனமுற்றோர் மற்றும் முதியோர்களுக்கு வீல் சேர் வசதி செய்யப்பட்டு அவர்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டது.
இந்த முகாமில் மாவட்ட கழக செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் ஒன்னாவது மண்டல குழு தலைவர் தி.மு. தனியரசு பகுதி செயலாளர் வைமா அருள் தாசன் மாமன்ற உறுப்பினர் சாமுவேல் திரவியம் மற்றும் மண்டல உதவி ஆணையர் பொறுப்பாளர் பாண்டியன். செயல் பொறியாளர் பாபு திருவொற்றியூர் வட்டாட்சியர் சகாயராணி மற்றும் திமுக நிர்வாகிகள் காங்கிரஸ் நிர்வாகிகள் சீனிவாசன். கார்த்தி. ஆறுமுகம்.மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பொது மக்களிடம் குறைகளை கேட்டு அறிந்து தேவையான உதவிகளை உடனடியாக செய்து கொடுக்க அதிகாரியிடம் அறிவுறுத்தினர்.
சிறப்பு முகாமில் கலைஞர் உரிமைத்தொகை , ஜாதி சான்றிதழ் , ஆதார் கார்டு ரேஷன் கார்டில் பெயர் நீக்குதல் பெயர் சேர்த்தல் உள்ளிட்ட சான்றிதழ்களை உடனடியாக பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.
13 துறைகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர் பரிசீலனை செய்யப்பட்டு உடனுக்குடன் திருத்தம் செய்யப்பட்டு உடனுக்குடன் தீர்வு கண்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பெண்கள் உரிமைத் தொகை ரேஷன் கார்டு , ஆதார் கார்டு , ஜாதி சான்றிதழ்களை உடனடியாக வழங்கப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்த பெண்கள் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.